வாழ்க வளமுடன்
*🌹குறள் : 499*
சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது.
*🌹Quote of the day*
Success is counted sweetest by those who never succeed. To comprehend a nectar – requires sorest need.
*🌹தெரியுமா?*
உடலில் கல்லீரலை மையமாகக் கொண்டுதான் ரத்தம் ஓடுகிறது என்றார் கி.பி. 150-ஆம் ஆண்டில் வாழ்ந்த அறிவியல் அறிஞர் 'கேலன்'. 17-ஆம் நூற்றாண்டு வரை இது உண்மை என்றே மருத்துவர்கள் நம்பினர். 'வில்லியம் ஹார்வி' என்ற அறிவியல் அறிஞர் ரத்தம் இதயத்திலிருந்து தான் அனுப்பப்படுகிறது என்று கண்டுபிடித்துக் கூறினார்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
*🌹இன்றைய கவி:*
மரணத்திற்குள்ளும்
போய் வரலாம்
ஒவ்வொருவரும்
தனது மனசாட்சியை
சிறிது
தொட்டு பார்த்தால்...!!!
*🌹பழமொழிகள்:*
ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
Make the best of a bad bargain.
*🌹நிகழ்வுகள்:*
👉 1959ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் பிறந்தார்.
👉 1910ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஹோவர்கிராஃப்ட்டை(HoverCraft) கண்டுபிடித்த கிறிஸ்தோபர் கொக்கரல் பிறந்தார்.
👉 1919ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.
*நினைவு நாள்:*
🏁 சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்)
*பிறந்த நாள்:*
🎼 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment