வாழ்க வளமுடன்
*🌹குறள் : 503*
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
*🌹Quote of the day*
To be successful be ahead of your time, but only a little.
*🌹தெரியுமா?*
1.உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி 'மேரி கியூரி'-1903.
2.விமானம் ஓட்டிய முதல் பெண்மணி செல்வி 'யேல் பிங்கில் டீன்'.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
உங்களைத் திருத்திக் கொள்ளாமல், வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ, கழிவறை இருந்த இடத்தில் சமையல் அறையைக் கொண்டுவருவதாலோ, வசதிகள் மாறலாம். ஆனால், உங்கள் வாழ்க்கை மாறிவிடாது!
*🌹இன்றைய கவி:*
முயற்சி செய்பவனை புதைத்தாலும் விதையாக மாறி முளைத்து நிற்பான் மரமாக......
*🌹பழமொழிகள்:*
வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல்.
Better be sure than sorry.
*🌹நிகழ்வுகள்:*
👉 1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார்.
👉 1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார்.
*பிறந்த நாள்:*
👉 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்த நாள்.
👉 ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் பிறந்தநாள்.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment