வாழ்க வளமுடன்
*🌹குறள் : 504*
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
*🌹Quote of the day*
Success usually comes to those who are too busy to be looking for it.
*🌹தெரியுமா?*
தன் வாலைப் பற்றிக் கொண்டு நிற்கும் தன்மையை கடல் குதிரைகள் பெற்றுள்ளன. பெண் கடல் குதிரைகள் முட்டையிட்டாலும் ஆண் கடல் குதிரைகளே அடைகாக்கின்றன. இதற்கு அதன் வயிற்றில் இருக்கும் தனி பை உதவி செய்கிறது.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
நீங்கள் துயரத்தில் மூழ்க வேண்டுமென்றால் யாரும் உங்களை கத்தியால் குத்தத் தேவையில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒருவர் சொன்ன சொல் போதும்.
*🌹இன்றைய கவி:*
பேதமை
நிறைந்த
வாழ்க்கையில்
பேரின்பம்
எப்படி
துளிர்க்கும்...!!!!
*🌹பழமொழிகள்:*
வாட்டிக்கொள்வதைவிட மகிழ்வது மேல்.
It is better to merry than to burn.
*🌹நிகழ்வுகள்:*
2003ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி (Spirit (rover)) செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.
*பிறந்த நாள்:*
👉 பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிறந்த நாள்.
👉 தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த நாள்.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment