வாழ்க வளமுடன்
*🌹குறள் : 477*
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
*🌹மு.வ உரை :*
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
*🌹Quote of the day*
No burden is so heavy for a man to bear as a succession of happy days.
*🌹தெரியுமா?*
பூமியில் டைனோசர்கள் வருவதற்கு முன்பே கடலில் சுறாமீன் உருவாகி விட்டது.அதாவது சுறாமீன் தோன்றி 400 மில்லியன் வருடங்கள் ஆகின்றன. மீன் வகைகளில் மிக பலசாலி சுறா. இதில் 386 வகைகள் உள்ளன. இதில் மனிதர்களை தாக்கக் கூடியவை 25 வகைகள் மட்டுமே.
*🌹சரித்திரம்:GK*
மிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு வங்காள தேசம்தான்.இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றது வங்காளதேசம்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
இங்கேயே, இப்போதே நிறைநிலையை அடைய முடியாதென்றால் வேறெந்த மறுவாழ்க்கையிலும் அடைவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
*🌹பழமொழிகள்:*
உனக்கு நீ நண்பனாய் இருந்தால் மற்றவர் உன்னை நண்பனாக்கிக் கொள்வர்.
Be a friend to thy self and others will be friend you.
*🌹நிகழ்வுகள் : 02.05.2020*
👉 1519ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி மறைந்தார்.
👉 1952ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும், ஜோகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment