வாழ்க வளமுடன்
*🌹குறள் : 482*
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
*🌹மு.வ உரை :*
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
*🌹Quote of the day*
It’s our nature: Human beings like success but they hate successful people.
*🌹தெரியுமா?*
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
*🌹உயிரினங்கள்:GK*
ஜெல்லி மீன்கள் கொடிய விஷம் கொண்டவை. மனிதனை 30 நொடிக்குள் கொல்லும் சக்தி இதற்கு உண்டு .
*🌹வாழ்க்கை தத்துவம்:*
மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பது கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமக்கு தந்துவிடும்.
*🌹பழமொழிகள்:*
அழகிய முகத்திற்குப் பரிந்துரை தேவையில்லை.
A good face is a letter of recommendation.
*🌹நிகழ்வுகள் : 07.05.2020*
📻 1895ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
👉 1952ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment