வாழ்க வளமுடன்
*🌹குறள் : 481*
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
*🌹மு.வ உரை :*
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும் அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
*🌹Quote of the day*
The worst part of success is to try finding someone who is happy for you.
*🌹தெரியுமா?*
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.
*🌹உயிரினங்கள்:GK*
பசிபிக் கடலின் உள்ள கீவில் தீவிலும் ,அதன் அருகில் உள்ள தீவுகளிலும் தேங்காய் நண்டுகள் எனும் ஒருவகை நண்டு இனம் காணப்படுகின்றன .அதிகபட்சம் ஒரு அடி நீளம் வரை வளரும். தேங்காயே இவற்றின் பிரதான உணவு.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
நீங்கள் எந்தச் செயலில் உண்மையான பெருமை பெற்றுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; அந்த நெறியாலே இன்றும் மிக்க பெருமையை அடைய முயற்சி செய்யுங்கள் .
*🌹பழமொழிகள்:*
மௌனமாயிருந்தாலும் அழகு பேசிவிடும்.
Beauty is eloquent even when silent.
*🌹நிகழ்வுகள் : 06.05.2020*
👉 1856ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் ஆஸ்திரியாவிலுள்ள ஃபிரெய்பர்க் நகரில் பிறந்தார்.
👉 1952ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்டிசோரி மறைந்தார்.
👉 1854ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment