வாழ்க வளமுடன்
*🌹குறள் : 494*
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
*🌹மு.வ உரை :*
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின் அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
*🌹Quote of the day*
The success of any great moral enterprise does not depend upon numbers.
*🌹தெரியுமா?*
முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். முதலையின் வயதை அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறார்கள்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
உண்ண உணவில்லாமல் இருப்பதை விட யாராலும் தேடப்படாத விரும்பப்படாத கவனிக்கப்படாத மறக்கப்பட்ட ஒருவராக இருப்பதே மிகப்பெரிய வறுமையாகும்.
*🌹பழமொழிகள்:*
நம்பிக்கை மலைகளையும் அசைத்திடும்.
Faith will move mountains.
*🌹நிகழ்வுகள் :25.05.2020*
1865ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் நெதர்நாலந்தில் பிறந்தார்.
1886ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மேற்கு வங்காளம், பர்த்வான் மாவட்டத்தில் சுபல்தகா கிராமத்தில் பிறந்தார்.
2001ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் வைஹன்மாயர்(Erik Weihenmayer) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
*முக்கிய தினம்:*
1.சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்
2.உலக தைராய்டு தினம்
*நினைவு நாள்:*
🎶 தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்
*பிறந்த நாள்:*
தமிழ் நூல்களை மொழிபெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம்
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment