வாழ்க வளமுடன்
*🌹குறள் : 479*
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
*🌹மு.வ உரை :*
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
*🌹Quote of the day*
Success is when the checks don’t bounce.
*🌹தெரியுமா?*
பாட்னாவின் பழைய பெயர் 'பாடலிபுத்திரம்'.
*🌹உயிரினங்கள்:GK*
மீன் கொத்திப்பறவை தண்ணீருக்குள் 7 அடி தூரம் வரை சென்று மீன்களை பிடிக்கும்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவர் இல்லாதிருக்கும் போது அவரைப் பற்றி, பிறர் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
*🌹பழமொழிகள்:*
அழகின் ஆழம் தோலளவுதான்.
Beauty is but skin deep.
*🌹நிகழ்வுகள் : 04.05.2020*
சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்
🔥 மே 4ம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் போது 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
🔥 அவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகப் பின்பற்றப்படுகிறது.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment