வாழ்க வளமுடன்
*🌹குறள் : 487*
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
*🌹மு.வ உரை :*
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார் (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
*🌹Quote of the day*
The secret to success is to offend the greatest number of people.
*🌹தெரியுமா?*
கடல் பறவையின் குஞ்சுகள் தன் தாயின் அலகிலுள்ள சிவப்பாயிருக்கும் ஓர் இடத்தைக் கொத்துமாம். இதுதான் தாய்க்கு குஞ்சுக்கு உணவு வேண்டும் என்ற அறிகுறி. உடனே, தாய், தன் உணவுக்குழலிலிருந்து உணவை குஞ்சுக்கு ஊட்டுமாம்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
*🌹பழமொழிகள்:*
அந்தியில் படுக்கச்செல் வைகறையில் துயில் எழு.
Go to bed with the lamb and rise with the lark.
*🌹நிகழ்வுகள் : 17.05.2020*
1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா, உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.
முக்கிய தினம் :-
உலக தொலைத்தொடர்பு தினம்
உலக உயர் இரத்த அழுத்த தினம்.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment