வாழ்க வளமுடன்
*🌹குறள் : 496*
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
*🌹மு.வ உரை :*
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
*🌹Quote of the day*
Success is not greedy, as people think, but insignificant. That is why it satisfies nobody.
*🌹தெரியுமா?*
கடல் அலைகள் எழுவதற்கு காரணம் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றலே என்பதைக் கண்டுபிடித்தவர் நியுட்டன்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
ஒவ்வொரு மனிதனையும் நீ எடை போடத் தொடங்கினால் உன்னால் எந்த மனிதன் மீதும் அன்பு செலுத்த முடியாது.
*🌹பழமொழிகள்:*
கேட்பதை நம்பவே நம்பாதே காண்பதை பாதி நம்பு.
Believe nothing of what you hear and only half of what you see.
*🌹நிகழ்வுகள் : 27.05.2020*
1.1907ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் ஸ்பிரிங்டேல் நகரில் பிறந்தார்.
2.1937ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
*நினைவு நாள்:*
1.1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மறைந்தார்.
2.1910ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ஜெர்மானிய அறிவியலாளர் ராபர்ட் கோச் (Robert Koch) மறைந்தார்.
*பிறந்த நாள்:*
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment