வாழ்க வளமுடன்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
*🌹மு.வ உரை :*
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
*🌹Quote of the day*
What is success? It is a toy balloon among children armed with pins.
*🌹தெரியுமா?*
முத்து சிப்பிகளின் உடலில் நமைச்சல் ஏற்படும்போது அதை தவிர்க்க 'நேக்ரி' என்ற திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் தூசிகளின் மீது படிந்து இறுகி முத்தாக மாறுகிறது.
*🌹உயிரினங்கள்:GK*
யாக் எருமையின் பால் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
*🌹பழமொழிகள்:*
வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை அன்று.
Life is not a bed of roses.
*🌹நிகழ்வுகள் : 08.05.2020*
1718ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
1907ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment