வாழ்க வளமுடன்
*🌹குறள் : 480*
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
*🌹மு.வ உரை :*
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால் ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
*🌹Quote of the day*
Every man has a right to be conceited until he is successful.
*🌹தெரியுமா?*
மேகங்கள் இரவு நேரத்தைக் காட்டிலும் பகலில் அதிக உயரத்தில் பறக்கின்றன.
*🌹உயிரினங்கள்:GK*
பெண்ணின் மூளையை விட ஆணின் மூளை உருவத்தில் பெரியது.
*🌹வாழ்க்கை தத்துவம்:*
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
*🌹பழமொழிகள்:*
அழகும் நேர்மையும் அரிதே இசைவுறும்.
Beauty and honesty seldom agree.
*🌹நிகழ்வுகள் : 05.05.2020*
👉 1948ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் மறைந்தார்.
🏁 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார்.
👉 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார்.
```SINDRELLA SMART EDUCATION```
```TENKASI```
Comments
Post a Comment